| 245 |
: |
_ _ |a மகேந்திரப்பள்ளி திருமேனியழகர் கோயில் - |
| 246 |
: |
_ _ |a மயேந்திரப்பள்ளி |
| 520 |
: |
_ _ |a திருமகேந்திரப்பள்ளி திருமேனியழகர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரை தலத்தில் ஒன்றாகும். இது மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி நகரின் அருகில் அமைந்துள்ளது. இவ்வாலயம் கொள்ளிட நதியின் தென்கரையில் அமைந்துள்ளது. இத்தலத்திலிருந்து 2 கி.மி. தொலைவில் கொள்ளிடம் கடலில் கலக்கிறது. இந்திரன் (மகேந்திரன்) வழிபட்டதால் இத்தலத்திற்கு மகேந்திரப்பள்ளி என்று பெயர். |
| 653 |
: |
_ _ |a கோயில், தமிழ்நாட்டு சிவாலயங்கள், தேவாரப் பாடல் பெற்ற தலங்கள், காவிரி வடகரைத் தலங்கள், சிவன் கோயில், காட்டுமன்னார்குடி, கடலூர், மயேந்திரப்பள்ளி, மகேந்திரப்பள்ளி, சீர்காழி, கொள்ளிடம், திருமேனியழகர், வடிவாம்பிகை, திருஞானசம்பந்தர் |
| 700 |
: |
_ _ |a திரு.வேலுதரன் |
| 710 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 905 |
: |
_ _ |a கி.பி.7-12-ஆம் நூற்றாண்டு / பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர் |
| 909 |
: |
_ _ |a 1 |
| 910 |
: |
_ _ |a 1300 ஆண்டுகள் பழமையானது. தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலம். திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். |
| 914 |
: |
_ _ |a 11.364092 |
| 915 |
: |
_ _ |a 79.793279 |
| 918 |
: |
_ _ |a வடிவாம்பிகை |
| 922 |
: |
_ _ |a கண்ட மரம், தாழை |
| 923 |
: |
_ _ |a மகேந்திர தீர்த்தம் |
| 924 |
: |
_ _ |a சிவாகமம் |
| 925 |
: |
_ _ |a ஆறுகால பூசை |
| 926 |
: |
_ _ |a மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை |
| 928 |
: |
_ _ |a இல்லை |
| 929 |
: |
_ _ |a வெளித்திருச்சுற்றில் விநாயகர், காசிவிசுவநாதர், திருமால் தேவியருடன், சிவலிங்கம், பைரவர், சூரியன், சந்திரன் சந்நிதிகள் உள்ளன. வலம் முடித்து, முன்னுள்ள வெளவவால் நெத்தி மண்டபத்தையடைந்தால் வலப்புறம் அம்மன் கருவறை உள்ளது. நின்ற திருக்கோலம். உள்ளே சென்றால் வலப்பால் நடராசசபை, சிவகாமியும் மாணிக்க வாசகரும் உடன் காட்சியளிக்கின்றனர். கிழக்கு திசையில் கருவறை. சதுரவடிவ கருவறையில் மூலவர் காட்சியளிக்கிறார். இத்தலத்தில் முருகப்பெருமான் சிங்காரவேலனாக ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நீன்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். |
| 930 |
: |
_ _ |a இந்திரன், கவுதம மகரிஷியின் மனைவி அகலிகை மீது ஆசை கொண்டதால், அவரிடம் உடம்பெல்லாம் கண்ணாகும்படி சாபம் பெற்றான். விமோசனத்திற்காக பூலோகம் வந்த அவன், பல தலங்களில் இலிங்கப் பிரதிஷ்டை செய்து, சிவனை வழிபட்டான். அதில் ஒன்று மகேந்திரப்பள்ளியாகும். சிறப்பு மிக்க இந்திரன் வழிபட்டதால், “மகேந்திரப்பள்ளி” என்று அவன் பெயரிலேயே சிறப்பு பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது. |
| 932 |
: |
_ _ |a கிழக்கு நோக்கிய வாயிலாக மூன்று நிலைகளையுடைய சிறிய இராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. வெளித்திருச்சுற்றில் விநாயகர், காசிவிசுவநாதர், திருமால் தேவியருடன், சிவலிங்கம், பைரவர், சூரியன், சந்திரன் சந்நிதிகள் உள்ளன. வலம் முடித்து, முன்னுள்ள வெளவவால் நெத்தி மண்டபத்தையடைந்தால் வலப்புறம் அம்மன் கருவறை உள்ளது. நின்ற திருக்கோலம். உள்ளே சென்றால் வலப்பால் நடராசசபை, சிவகாமியும் மாணிக்க வாசகரும் உடன் காட்சியளிக்கின்றனர். கிழக்கு திசையில் கருவறை. சதுரவடிவ கருவறையில் மூலவர் காட்சியளிக்கிறார். விநாயகருக்கு தனிசன்னதி இருக்கிறது. இவருக்கு இருபுறமும் ராகு, கேது இருவரும் உள்ளனர். ஆலயத்தின் தீர்த்தம் இந்திர தீர்த்தம் என்கிற மகேந்திர தீர்த்தம். இது கோபுர வாயிலுக்கு எதிரே வெளியே உள்ளது. |
| 933 |
: |
_ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| 934 |
: |
_ _ |a ஆச்சாள்புரம், சீர்காழி தோணியப்பர் கோயில் |
| 935 |
: |
_ _ |a கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் இத்தலம் அமைந்துள்ளது. சிதம்பரத்திலிருந்து-சீர்காழி செல்லும் சாலையில் கொள்ளிடம் புதிய பாலத்தைத் தாண்டி, கொள்ளிடம் ஊரை அடைந்து, மெயின் ரோட்டில் வழிகாட்டிப் பலகையுள்ள இடத்தில் இடதுபுறமாக சென்றால் இத்தலத்தை அடையலாம். சிதம்பரத்தில் இருந்து சீர்காழி செல்லும் சாலையில் கொள்ளிடம் சென்று, அங்கிருந்து ஆச்சாள்புரம் வழியாக நல்லூர் - முதலைமேடு ஆகிய ஊர்களைக் கடந்து திருமயேந்திரப்பள்ளியை அடையலாம். |
| 936 |
: |
_ _ |a காலை 9.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை, மாலை 6.00 மணி முதல் 7.00 மணி வரை |
| 937 |
: |
_ _ |a மயேந்திரப்பள்ளி |
| 938 |
: |
_ _ |a காட்டுமன்னார்குடி |
| 939 |
: |
_ _ |a திருச்சி |
| 940 |
: |
_ _ |a காட்டுமன்னார்குடி வட்டார விடுதிகள் |
| 995 |
: |
_ _ |a TVA_TEM_000330 |
| barcode |
: |
TVA_TEM_000330 |
| book category |
: |
சைவம் |
| cover images TVA_TEM_000330/TVA_TEM_000330_மகேந்திரப்பள்ளி_திருமேனியழகர்-கோயில்-0003.jpg |
: |
|
| Primary File |
: |
TVA_TEM_000330/TVA_TEM_000330_மகேந்திரப்பள்ளி_திருமேனியழகர்-கோயில்-0001.jpg
TVA_TEM_000330/TVA_TEM_000330_மகேந்திரப்பள்ளி_திருமேனியழகர்-கோயில்-0002.jpg
TVA_TEM_000330/TVA_TEM_000330_மகேந்திரப்பள்ளி_திருமேனியழகர்-கோயில்-0003.jpg
TVA_TEM_000330/TVA_TEM_000330_மகேந்திரப்பள்ளி_திருமேனியழகர்-கோயில்-0004.jpg
TVA_TEM_000330/TVA_TEM_000330_மகேந்திரப்பள்ளி_திருமேனியழகர்-கோயில்-0005.jpg
TVA_TEM_000330/TVA_TEM_000330_மகேந்திரப்பள்ளி_திருமேனியழகர்-கோயில்-0006.jpg
|